top of page
MM001.png

மாமதுரையர் அமைப்பின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள்:

1) மாமதுரையர் அமைப்பு மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனீ, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாமதுரை பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி & உறுப்பினர் குடும்ப மேம்பாடு இரண்டையும் முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படும்.
2) உலகெங்கும் வாழும் மாமதுரை பகுதிகளை பூர்வீகமாக கொண்ட மக்களை ஒருங்கிணைத்து அவர்கள் ஆலோசனைகளையும் ஆதரவுகளை பெற்று பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
3) தனிப்பட்ட விறுப்பு, வெறுப்பு, ஜாதி, மதம், அரசியல் மற்றும் கருத்தியலுக்கு அப்பாற்பட்டு நமது அமைப்பு செயல்படும்.
4) போக்குவரத்து, சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தி தூய்மையாக ஜொலிக்க வைக்க முயற்சிக்கப்படும்.
5) சுற்றுலா, கலை, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, நவீன விவசாயம், ஏற்றுமதி உள்ளிட்ட மதிப்புகூட்டு மற்றும் அறிவுசார் பொருளாதார மண்டலமாக மாமதுரை பகுதியை அடையாளப்படுத்த முயற்சிக்கப்படும்.
6) உணவு, மருத்துவம், கல்வி, விளையாட்டு, புராதனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்கள் ஊக்குவிக்கப்படும்.
7) ஏற்கனவே மாமதுரை பகுதிகளுக்கு, ஓரிரு குறிப்பிட்ட தலங்களுக்கு மட்டுமே வரும் சுற்றுலாவாசிகளை இதர செயல்பாட்டில் உள்ள தலங்களுக்கும் வரச்செய்தல். இதன் மூலம் ஓரிரு நாள் செலவிடும் சுற்றுலா வாசிகளை மேலும் சில நாட்கள் செலவிட முயற்சிக்கப்படும்.
8) மாமதுரை பகுதிகளில் மறக்கப்பட்ட அல்லது பராமரிக்கப்படாத வரலாற்று இடங்கள் மற்றும் சின்னங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நம் பெருமையை பறைசாற்றும் சிலைகள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற முயற்சிக்கப்படும்.
9) தொழில் வணிகம் மற்றும் சேவை தொழில் செய்பவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை உயர்ந்த தரத்தில் வழங்குவது ஊக்குவிக்கப்படும்.
10) முக்கிய தலங்களின் அருமை பெருமைகளை வீடியோக்களாக, சேனல்கள் மூலம், உலகமுழுவதும் இலட்சக்கணக்கானோருக்கு கொண்டு சேர்க்க முயற்சிக்கப்படும்.
11) மதுரையை பல்வேறு நாட்டு நகரங்களுடன் சகோதரி நகராக (SISTER CITY) இணைக்க முயற்சிக்கப்படும்.
12) தொழில் வளர்ச்சிக்கு துறைவாரியாக பல்வேறு கிளஸ்டர்களை உருவாக்க முயற்சிக்கப்படும்.
13) முடங்கும் நிலையில் உள்ள பாரம்பரிய தொழில் வணிகங்களை புனரமைக்க அரசு மற்றும் தனியார் நிதி உதவியுடன் மீட்டெடுக்க முயற்சிக்கப்படும்.
14) டிஜிட்ஆல் அமைப்புடன் இணைந்து நடைபாதை மற்றும் குறு வியாபாரிகளுக்கான டிஜிட்டல் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

நிர்வாகம் & நிதி மேலாண்மை:

1) மாமதுரையர் அமைப்பில் (1) வழிகாட்டு குழு - GBM (2) ஆலோசனைக்குழு - ABM (3) செயற்குழு - ECM (4) பொதுக்குழு - MEMBERS என நான்கு குழுக்கள் செயல்படும்.
2) பகுதி வாரியாகவும், கமிட்டி வாரியாகவும், செயற்குழுவில் இருந்து ஒருங்கிணைப்பாளர்கள் (CONVENER), இணை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
3) அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு உறுப்பினர் சந்தா மற்றும் நன்கொடைகள் மூலம் நிதி திரட்டப்படும்.


உறுப்பினர் பயன்கள் & சந்தா:

1) மாமதுரையர் உறுப்பினர் சந்தா காலண்டர் ஆண்டாக இருக்கும் (ஜனவரி முதல் டிசம்பர் வரை)
2) உறுப்பினர் என்பது குடும்ப உறுப்பினர்கள் (4 வரை ) அடங்கும். தகுந்த கூட்டங்களில் குடும்ப உறுப்பினர் எவரேனும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
3) மாமதுரையர் உறுப்பினர்கள் பங்குபெறும் வகையில், ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் விழாவுடன் இணைந்த ஆண்டுவிழா, மார்ச் மாதத்தில் மகளிர் தின விழா, மே மாதத்தில் சித்திரை விழா போன்றவை நடத்தப்படும்.
4) மாமதுரையர் உறுப்பினர்கள் தங்கள் உறுப்பினர் அடையாள அட்டை மூலம் 5% முதல் 50% வரை தள்ளுபடியில் பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளை மாமதுரை பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூலம் பெறலாம்.
5) டெட்கோ அமைப்புடன் இணைந்து செயல்படுத்தப்படும் "இல்லம் தோறும் தொழில்" திட்டத்தில் பெண் உறுப்பினர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
6) அரசாங்கத்தின் பல்வேறு சட்டதிட்டங்கள் மற்றும் சலுகைகள் சம்பந்தமாக நடத்தப்படும் விழிப்புணர்வு கூட்டங்களில் மாமதுரையர் உறுப்பினர் குடும்பத்தில் ஏதுவானவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
7) உறுப்பினர் வருட சந்தா ரூ. 500/-

மாமதுரையர் உறுப்பினர்

பாலினம்
ஆண்
பெண்
தங்கள் நிலை ?
தொழில் முனைபவர்
வல்லுநர் / ஆலோசகர்
அரசு ஊழியர்
தனியார் ஊழியர்
சமூக ஆர்வலர்
பணி நிறைவு
வேறு நிலை
வசிக்கும் மாவட்டம் / இடம்
மதுரை
சிவகங்கை
திண்டுக்கல்
தேனி
விருதுநகர்
ராமநாதபுரம்
சென்னை
வெளிநாடு
வேறு இடம்
Product
விதிமுறை: விண்ணப்பம் ஏற்பதும் புறக்கணிப்பதும் நிர்வாகத்தின் இறுதி முடிவு, செலுத்தும் பணம் சரிபார்ப்புக்கு உட்பட்டு ஒப்புதல் வழங்கப்படும்.
சம்மதிக்கிறேன்.

ஜே. கே. முத்து,

நிறுவனர்

க. திருமுருகன்,

தலைவர்

bottom of page