top of page
FB.png

மதுரையர் இயக்கம் "#மதுரைக்குவருக, #Welcome2Madurai" என்ற முழக்கத்துடன் மதுரை மற்றும் சுற்று மாவட்டங்களில் "சுற்றுலா" மேம்பாட்டை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இதன்மூலம் பல்வேறுவிதமான சுற்றுலாக்களை ஊக்குவிக்கவும், அதற்கான சூழலை உருவாக்கவும், அதுசார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்தவும். உலகெங்கும் வாழும் மதுரையர்களை இணைத்து அதன் மூலம் உலகமுழுவதுமிருந்து சுற்றுலா வாசிகளை ஈர்க்கும் விதத்தில் செயல்படுகிறது.

மதுரையால் ! மதுரைக்காக இணைவோம் என்ற அடிப்படையில் ஜாதி, மதம், கட்சி மற்றும் சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கொண்டு இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மதுரையர் இயக்கத்தின் ஆலோசனைக்குழுவில் மதுரையை சார்ந்த மாபெரும் தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரிகள், திரைப்பட நடிகர், நடிகை, இயக்குனர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.


(1) உணவு, மருத்துவம், கல்வி, விளையாட்டு, புராதனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்களை ஊக்குவிப்பது.
(2) போக்குவரத்து, சுற்றுச்சூழல், சுகாதாரத்தை மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தி தூய்மையான மாநகரமாக ஜொலிக்க வைப்பது.
(3) ஏற்கனவே மாமதுரைக்கு ஓரிரு குறிப்பிட்ட தலங்களுக்கு மட்டுமே வரும் சுற்றுலாவாசிகளை இதர செயல்பாட்டில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களுக்கும் இணை நகர சுற்றுலா தலங்களுக்கும் வரச்செய்தல். இதன் மூலம் ஓரிரு நாள் செலவிடும் சுற்றுலா வாசிகளை மேலும் ஓரிரு நாட்கள் செலவிடச் செய்தல்.
(4) மதுரையில் மறக்கப்பட்ட அல்லது பராமரிக்கப்படாத வரலாற்று இடங்கள் மற்றும் சின்னங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நம் பெருமையை பறைசாற்றும் சிலைகள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற செய்தல்.
(5) திரைப்படங்களில் தவறாக புனைந்து வன்முறை பூமியாக காட்டப்படும் அடையாளத்தை மாற்றுதல்.
(6) தொழில் வணிகம் மற்றும் சேவை தொழில் செய்பவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை உயர்ந்த தரத்தில் வழங்குவதை உறுதி செய்தல்.

Best Value

Maduraiyar Family Membership

₹ 500

500

This Yearly Membership for Entire Family (₹ 500+GST)

Valid for 12 months

Get Maduraiyar Family Club Card (MFC)

Access & Post "https://bgrow.com/maduraiyar" Web Channel

Access Pass for பொங்கல் கொண்டாட்டம்

Access Pass for மருத்துவ முகாம்

Access Pass for மகளிர்தின கொண்டாட்டம்

Access Pass for சித்திரைக்கூடல் கொண்டாட்டம்

Access Pass for கல்வி வழிகாட்டு முகாம்

Access Pass for மதுரையர் தன்னார்வலர் கூட்டம்

Access Pass for மதுரையர் மாநாடு

Access Pass for கடன் & நிதிஉதவி முகாம்

Access Pass for வேலைவாய்ப்பு முகாம்

Access Pass for தொழில் சான்றிதழ்கள் முகாம்

Access Pass for அரசு சலுகை திட்ட முகாம்

Access Pass for தொழில்வாய்ப்பு முகாம்

foorter.jpg
bottom of page