top of page
BG_0030.png
MM001.png

மதுரையர் இயக்கம் "#மதுரைக்குவருக, #Welcome2Madurai" என்ற முழக்கத்துடன் மதுரை மற்றும் சுற்று மாவட்டங்களில் "சுற்றுலா" மேம்பாட்டை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இதன்மூலம் பல்வேறுவிதமான சுற்றுலாக்களை ஊக்குவிக்கவும், அதற்கான சூழலை உருவாக்கவும், அதுசார்ந்த கட்டமைப்புகளை மேம்படுத்தவும். உலகெங்கும் வாழும் மதுரையர்களை இணைத்து அதன் மூலம் உலகமுழுவதுமிருந்து சுற்றுலா வாசிகளை ஈர்க்கும் விதத்தில் செயல்படுகிறது.

மதுரையால் ! மதுரைக்காக இணைவோம் என்ற அடிப்படையில் ஜாதி, மதம், கட்சி மற்றும் சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை கொண்டு இந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மதுரையர் இயக்கத்தின் ஆலோசனைக்குழுவில் மதுரையை சார்ந்த மாபெரும் தொழிலதிபர்கள், ஓய்வு பெற்ற அரசு உயரதிகாரிகள், திரைப்பட நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர்.

  1. மாமதுரையின் சுற்றுலா வளர்ச்சி மதுரையர் உறுப்பினர் மற்றும் அவர்தம் குடும்பத்தின் மேம்பாடு இரண்டும் முக்கிய செயல்பாடுகளாகும்(1)

  2. உணவு, மருத்துவம், கல்வி, விளையாட்டு, புராதனம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாக்களை ஊக்குவிப்பது.

  3. சுற்றுலா, கலை, தொழில்நுட்பம், ஆராய்ச்சி, நவீன விவசாயம், ஏற்றுமதி உள்ளிட்ட மதிப்புகூட்டு மற்றும் அறிவுசார் பொருளாதார மண்டலமாக மாமதுரையை அடையாளப்படுத்த முயற்சிக்கப்படும்.

  4. போக்குவரத்து, சுற்றுச்சூழல், சுகாதாரத்தை மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்தி தூய்மையான மாநகரமாக ஜொலிக்க வைப்பது.

  5. ஏற்கனவே மாமதுரைக்கு ஓரிரு குறிப்பிட்ட தலங்களுக்கு மட்டுமே வரும் சுற்றுலாவாசிகளை இதர செயல்பாட்டில் உள்ள மற்ற சுற்றுலா தலங்களுக்கும் இணை நகர சுற்றுலா தலங்களுக்கும் வரச்செய்தல். இதன் மூலம் ஓரிரு நாள் செலவிடும் சுற்றுலாவாசிகளை மேலும் ஓரிரு நாட்கள் செலவிடச் செய்தல்.

  6. மதுரையில் மறக்கப்பட்ட அல்லது பராமரிக்கப்படாத வரலாற்று இடங்கள் மற்றும் சின்னங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நம் பெருமையை பறைசாற்றும் சிலைகள் மற்றும் ஓவியங்கள் இடம்பெற செய்தல்.

  7. திரைப்படங்களில் தவறாக புனைந்து வன்முறை பூமியாக காட்டப்படும் அடையாளத்தை மாற்றுதல்.

  8. தொழில் வணிகம் மற்றும் சேவை தொழில் செய்பவர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை உயர்ந்த தரத்தில் வழங்குவதை உறுதி செய்தல்.

  9. மதுரையை பல்வேறு நாட்டு நகரங்களுடன் சகோதரி நகராக (SISTER CITY) இணைக்க வழிவகை செய்தல்.

  10. தொழில் வளர்ச்சிக்கு துறைவாரியாக பல்வேறு கிளஸ்டர்களை உருவாக்குதல்.

மாமதுரையர் உறுப்பினர்

பாலினம்
ஆண்
பெண்
தங்கள் நிலை ?
தொழில் முனைபவர்
வல்லுநர் / ஆலோசகர்
அரசு ஊழியர்
தனியார் ஊழியர்
சமூக ஆர்வலர்
பணி நிறைவு
வேறு நிலை
வசிக்கும் மாவட்டம் / இடம்
மதுரை
சிவகங்கை
திண்டுக்கல்
தேனி
விருதுநகர்
ராமநாதபுரம்
சென்னை
வெளிநாடு
வேறு இடம்
உறுப்பினர் விருப்ப தேர்வு : (மார்ச் 2025 வரையிலான வருட சந்தா)
அடிப்படை உறுப்பினர்: ரூ.500/- குடும்ப நபர்கள் ஒவ்வொருவரும் தகுந்த நிகழ்வில் பங்கேற்கலாம்.
செயற்குழு உறுப்பினர்: ரூ.1,500/- இதில் அடைப்படை உறுப்பினர் தகுதியும் அடக்கம், மேலும் செயற்குழு உறுப்பினர்களில் இருந்துதான் கமிட்டி நிர்வாகிகள் தேர்தெடுக்கப்படுவர்.
பணம் செலுத்த: (with GST)
₹590
₹1,770
விதிமுறை: விண்ணப்பம் ஏற்பதும் புறக்கணிப்பதும் நிர்வாகத்தின் இறுதி முடிவு, செலுத்தும் பணம் சரிபார்ப்புக்கு உட்பட்டு ஒப்புதல் வழங்கப்படும்.
சம்மதிக்கிறேன்.

ஜே. கே. முத்து,

நிறுவனர்

க. திருமுருகன்,

தலைவர்

bottom of page