top of page
trademark breadcrumb.png

Huawei Technologies Co. Ltd v. ZTE Corp. – 2015 (CJEU)

  • Dec 1, 2025
  • 2 min read

“FRAND விதிகளை பின்பற்றாமல் SEP உரிமையாளர் வழக்கு தொடர முடியாது — நீதியான பேச்சுவார்த்தை முதலில் அவசியம்.”


Short Description


4G/LTE போன்ற தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் Standard-Essential Patents (SEPs) தொடர்பான முக்கிய தீர்ப்பு இது. SEP உரிமையாளர் தனது காப்புரிமை மீறப்பட்டது என்று சொல்லி உடனடியாக injunction கேட்க முடியுமா? அல்லது முதலில் FRAND அடிப்படையில் உரிமம் வழங்க முயற்சிக்க வேண்டுமா?


CJEU தெளிவாக கூறியது: SEP உரிமையாளர் முதலில் FRAND விதிகள் படி உரிமம் வழங்க முன்வர வேண்டும்; அதற்கு பின் தான் injunction கேட்க முடியும். அதேபோல் எதிர் தரப்பும் நியாயமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.


Facts


Huawei நிறுவனத்திடம் LTE (4G) தொழில்நுட்பத்துக்கு அவசியமான SEP காப்புரிமை இருந்தது. ZTE தனது தயாரிப்புகளில் அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது; SEP என்பதால் Huawei-யின் patent-இல் இருந்து தப்ப முடியவில்லை.


இருவரிடையேயும் FRAND உரிமம் குறித்த பேச்சுவார்த்தை வெற்றியடையவில்லை. அதன் பிறகு Huawei ஜெர்மனி நீதிமன்றத்தில்:


⦁ injunction,

⦁ damages,

⦁ தயாரிப்புகளை திரும்ப பெற வேண்டும்

என்று வழக்கு தொடர்ந்தது.


ZTE, இந்த injunction கோரிக்கை Huawei-யின் ஆதிக்கப் பணி (abuse of dominance) என Article 102 TFEU படி வாதித்தது. Huawei FRAND விதிகள் படி உரிமம் வழங்க முன்வரவில்லை என்றும் ZTE கூறியது.


Findings / Reasoning


நீதிமன்றம் ஒரு நியாயமான FRAND பேச்சுவார்த்தை நடைமுறையை அமைத்தது.


1. SEP உரிமையாளரின் கடமைகள் (Huawei)

⦁ முதலில் காப்புரிமை மீறல் பற்றி தெளிவான அறிவிப்பு வழங்க வேண்டும்.

⦁ பின்னர் குறிப்பிட்ட FRAND offer (royalty, terms, கணக்கீடு) கொடுக்க வேண்டும்.


2. எதிர் தரப்பின் கடமைகள் (ZTE)

⦁ உடனடியாகவும் நல்ல நம்பிக்கையுடன் பதிலளிக்க வேண்டும்.

⦁ FRAND உரிமம் பேசத் தயாராக இருக்க வேண்டும்.

⦁ Counter-offer வழங்கலாம்.

⦁ Negotiation நடக்கும் போது security deposit / guarantee வழங்க வேண்டும்.


3. Dominance Abuse

FRAND நடைமுறையை பின்பற்றாமல் injunction கோருவது ஆதிக்கத் துஷ்பிரயோகம் என நீதிமன்றம் தெரிவித்தது.


Suggestions / Observations


இந்த தீர்ப்பு SEP–FRAND வழக்குகளில் உலகளவில் வழிகாட்டுதலாக கருதப்படுகிறது. இது:

⦁ royalty கணக்கில் வெளிப்படைத்தன்மை,

⦁ நல்லநம்பிக்கை பேச்சுவார்த்தை,

⦁ SEP உரிமையாளர் “hold-up” செய்வதைத் தடுக்க,

⦁ உரிமம் பெறுபவர் “hold-out” செய்வதையும் தடுக்க

எல்லாம் முக்கியம் என வலியுறுத்துகிறது.


Judgment & Date


Huawei, FRAND நடைமுறையை பின்பற்றிய பின் injunction கேட்கலாம்; அதேபோல் ZTE-வும் நியாயமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என CJEU தீர்ப்பு வழங்கியது.


தீர்ப்பு தேதி : 16 ஜூலை 2015


 
 
 

Comments


bottom of page