Nandhini Deluxe v. Karnataka Co-operative Milk Producers’ Federation Ltd
ஒத்த ஒலி இருந்தாலும், பொருட்கள் மற்றும் சேவைகள் வேறுபட்டால் குழப்பம் ஏற்படாது என்பதையும், Trademark monopoly யின் வரம்பையும் விளக்கிய தீர்ப்பு.
Summary
“NANDINI” என்ற பெயரில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்த KMF, “Nandhini Deluxe” உணவகத்தின் பெயரை குழப்பம் ஏற்படும் என கூறி எதிர்த்தது.
உச்சநீதிமன்றம், பெயர்கள் ஒத்திருந்தாலும் பொருட்களும் சேவைகளும் வேறுபடுவதால் பொதுமக்கள் குழப்பப்பட வாய்ப்பு இல்லை என தீர்மானித்தது.
Facts
KMF-ன் குறி பால், நெய், வெண்ணெய் போன்ற பொருட்களுக்காக பயன்படுத்தப்பட்டது. மறுபுறம் “Nandhini Deluxe” உணவகம் ரெஸ்டாரன்ட் சேவைக்காக தனது பெயரை பதிவு செய்ய முயன்றது.
KMF எதிர்ப்பு தெரிவித்ததால் பதிவு மறுக்கப்பட்டது; பின்னர் வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது.
Findings
“NANDINI” & “NANDHINI” ஒத்ததாக இருந்தாலும், சேவைகள் முற்றிலும் வேறுபட்டவை—ஒரு நிறுவனம் பால் பொருட்கள் விற்கிறது, மற்றொன்று உணவகம் நடத்துகிறது. எனவே குழப்பம் ஏற்படும் சாத்தியம் மிகக் குறைவு.
மேலும் “Nandhini” என்பது பொதுவான பெயர் என்பதால் முழு ஒரே உரிமை கோர முடியாது எனவும் நீதிமன்றம் கூறியது.
Judgment
“Nandhini Deluxe” குறியை பதிவு செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. ஒலி ஒத்ததைக் காரணம் காட்டி தடுப்பதற்க KMF-க்கு உரிமை இல்லை என தீர்ப்பு கூறியது.



