top of page
trademark breadcrumb.png

Johnson & Johnson v. Medserve (Delhi High Court, 11 March 2025)

ஜான்சன் & ஜான்சன் மருத்துவ சாதனங்களை போலியாக தயாரித்த மெட்ஸர்விற்கு ₹3.34 கோடி இழப்பீடு விதித்தது டெல்லி உயர்நீதிமன்றம்; இதுபோன்ற போலி உற்பத்தி பொதுச்சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அபாயம் எனக் கூறியது.


சுருக்கம் :


ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் SURGICEL, ETHICON, LIGACLIP என்ற வர்த்தகச்சின்னங்களின் கீழ் போலி அறுவைச் சிகிச்சை சாதனங்கள் விற்கப்படுவதை கண்டுபிடித்தது. சோதனைகளிலும் விசாரணையிலும் மெட்ஸர்வ் தான் பொறுப்பானது என தெரியவந்தது. நோயாளிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, டெல்லி உயர்நீதிமன்றம் அதிக இழப்பீடும் நிரந்தரத் தடை உத்தரவும் வழங்கியது.


உண்மைகள் :


⦁ 2019-இல் புகார் பதிவு செய்யப்பட்டது; 2017 முதல் போலி உற்பத்தி செய்தது மெட்ஸர்வ் என கண்டுபிடிக்கப்பட்டது.


⦁ அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக போலி பொருட்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டன.


⦁ சோதனைகளில் பெரிய அளவில் போலி மருத்துவ சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


⦁ சட்ட நடவடிக்கையை தவிர்க்க மெட்ஸர்வ் லஞ்சம் கொடுக்க முயற்சித்தது.

நீதிமன்றக் கண்டுபிடிப்புகள்


⦁ மருத்துவ சாதனங்களை போலியாக உற்பத்தி செய்வது சாதாரண வர்த்தகச்சின்ன மீறல் அல்ல; இது மனித உயிருக்கு ஆபத்தானது.


⦁ நோயாளிகளின் பாதுகாப்பை புறக்கணித்து மெட்ஸர்வ் நினைத்தே இவ்வாறு செய்தது.


⦁ மருத்துவ சாதனங்கள் தொடர்பான அறிவுசார் சொத்து வழக்குகளில் பொதுநலமும் சுகாதாரமும் முக்கியமானவை.


பரிந்துரைகள் :


⦁ மருத்துவ துறையில் போலி உற்பத்தியாளர்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் அவசியம்.


⦁ நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகள் அறுவைச் சிகிச்சை பொருட்களின் மூலத்தை சரிபார்க்க வேண்டும்.


⦁ இப்படிப் பட்ட குற்றவாளிகளைத் தடுக்கும் விதமாக நீதிமன்றங்கள் தொடர்ந்தும் கடுமையான இழப்பீடுகளை விதிக்க வேண்டும்.


தீர்ப்பு :


⦁ SURGICEL, ETHICON, LIGACLIP என்ற வர்த்தகச்சின்னங்களைப் பயன்படுத்தும் உரிமையை மெட்ஸர்வுக்கு நிரந்தரமாகத் தடை செய்தது.

⦁ போலி பொருட்களை முழுமையாக அழிக்க உத்தரவிட்டது.

⦁ இழப்பீடு: ₹2.34 கோடி.

⦁ தண்டனை இழப்பீடு: ₹1 கோடி.

⦁ வழக்கு செலவுகள் மீள வழங்கப்பட வேண்டும்.


தீர்ப்பு தேதி : 11 மார்ச் 2025

 
 
 

Comments


bottom of page